பணியாற்றிய கடையிலேயே கைவரிசையைக் காட்டிய ஊழியர்கள்
தாங்கள் பணியாற்றிய கடையில் இருந்து பெறுமதியான ட்ரோன்களைத் திருடிய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நுகேகொட - மிரிஹான வீதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
குறித்த விற்பனை நிலையத்தில் இருந்து 15 ட்ரோன்கள் காணாமல் போயிருந்த நிலையில் அது தொடர்பில் மிரிஹான பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பணியாற்றிய இளைஞர்
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசாரணையில் அங்கு பணியாற்றிய இளைஞர்களே இந்தத் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் கடந்த ஜூன் மாதம் 20ஆம் திகதி அங்கு பணிபுரியும் போது இந்த பொருட்களை திருடிச் சென்றுள்ளதாகவும் விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் நுகேகொட, பன்னிபிட்டிய மற்றும் மாவத்தகம பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்ததுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |