நுவரெலியாவில் வீடொன்றை உடைத்து திருட்டு
நுவரெலியா (Nuwara Eliya) பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றில் பணப்பையில் இருந்த பணத்தினை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த திருட்டு சம்பவமானது, நுவரெலியா - லபுக்கலை, குடாஒயா பகுதியில் உள்ள வீடொன்றிலேயே இடம்பெற்றுள்ளது.
பொலிஸில் முறைப்பாடு
சம்பவம் இடம்பெற்ற வீட்டில் நேற்று (13) இரவு தாய் மற்றும் மகன் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த நேரம் வீட்டின் ஜன்னலை உடைத்து உள்நுழைந்த மர்ம நபர்கள் வீட்டில் பாதுகாப்பாக பணப்பையில் வைக்கப்பட்டிருந்த 20 ஆயிரம் ரூபா பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், திருட்டு சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் வீட்டார் இன்று (14) முறைப்பாடு செய்துள்ளதுடன் பொலிஸார் மற்றும் தடயவியல் அதிகாரிகள் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்! News Lankasri

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri
