நண்பனின் பிறந்தநாளுக்காக தண்ணீர் மோட்டர் திருடிய இளைஞர்கள்: மூவர் கைது (Photo)
நண்பனின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு பணம் தேவையென்பதால் வீடு ஒன்றை உடைத்து தண்ணீர் மோட்டர் ஒன்றை திருடி 5ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்து பிறந்தநாள் கொண்டாடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (17.11.2022) கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸில் கைது
திருடப்பட்ட தண்ணீர் மோட்டர் மீட்கப்பட்டுள்ள சம்பவம் மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து வீதியில் இருந்த இளைஞர் குழு ஒன்றில் சந்தேகம் கொண்டு அவர்கள் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் 20-24 வயதுடைய 3 இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
