கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்கு குறித்து சாகர காரியவசம் வெளியிட்ட தகவல்
கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்திற்கு சொந்தமான வெஸ்ட் கோஸ்ட் நிறுவனத்தின் 40 வீத பங்குகள் அமெரிக்க நிறுவனத்திற்கு 15 ஆண்டுகளுக்கே வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் (Sakara kariyavasam) தெரிவித்துள்ளார்.
பிரதமருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகளின் தலைவர்கள் எவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
15 ஆண்டுகளுக்கு 40 வீத பங்குகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பில் அதற்கு அப்பால் பிரச்சினையில்லை. இது நாட்டுக்கு மிகவும் பிரயோசனமான, எரிசக்தி துறையில் முக்கியமானது. அத்துடன் நாட்டின் வறிய மக்களுக்கு குறைந்த விலையில் மின்சாரத்தை வழங்கக்கூடிய முதலீட்டு திட்டம் என்றும் தெரிவித்துள்ளார்.
கேள்வி - எனினும் உங்களுடன் இருக்கும் கட்சித் தலைவர்கள் இது சம்பந்தமாக எதிர்ப்பதாக கூறுகின்றனர்.
பதில் - இல்லை எவரும் எதிர்க்கவில்லை.
கேள்வி - பிரதமருடனான பேச்சுவார்த்தையில் எவரும் எதிர்ப்பை வெளியிடவில்லையா?
பதில் -இல்லை. விடயங்களை தெளிவுப்படுத்தியதும் அனைவருக்கும் புரிந்தது. அத்துடன் குறுகிய காலத்திற்கு இப்படியான முதலீடுகளை பெற முடியும் என்றால், அவ்வாறான முதலீடுகளை உலகில் உள்ள எந்த நாடும் அன்புடன் அரவணைத்துககொள்ளும் என சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமருக்கும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறிய கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே சாகர காரியவசம் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில் மைத்திரிபால சிறிசேன, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரன, தினேஷ் குணவர்தன உள்ளிட்ட சிறிய கட்சிகளின் தலைவர்களும், நிதியமைச்சர் பசில் ராஜபக்சவும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்டனர்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 5 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
