கனடாவில் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களால் பரபரப்பு - மீட்பு பணிகள் தீவிரம்
கனடா - ஒன்ராறியோவின் ட்ரோடன் சுரங்கத்தில் சிக்கியுள்ள 39 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
39 தொழிலாளர்களும் நேற்று மதியம் சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்டதாகத் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், மீட்புக்குழுவினர் சுரங்கத்தினுள் நுழைந்துள்ளதாகத் திங்களன்று இரவு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாகவும், அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அது மட்டுமின்றி அவர்கள் அனைவருக்கும் உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ உதவிகளும் அளிக்கப்பட்டு வருவதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக விரைவில் சுரங்கத்தில் சிக்கியுள்ள அனைவரும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் எனத் தொடர்புடைய நிர்வாகிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.