பிரான்சில் துண்டிக்கப்பட்ட தலையுடன் பொலிஸ் நிலையம் சென்றவரால் பரபரப்பு
பிரான்சில் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற ஒருவர் ஆணின் துண்டிக்கப்பட்ட தலையை பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் தெற்கு பிரான்சின் Villeneuve மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
பொலிஸ்நிலையம் சென்ற அந்த 38 வயது நபர், தாம் ஒரு கொலை செய்துள்ளதாக கூறி துண்டிக்கப்பட்ட தலையை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்.
இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், தலை துண்டிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்ட ஆணின் உடல் ஒன்றை கைப்பறியுள்ளனர்.
அதேவேளை கொலை வழக்கு தொடர்பாக கைதாகியுள்ள அந்த நபர் ஏற்கனவே போதை மருந்து தொடர்பில் கைதாகி சிறை என்றவர் என கூறப்படுகிறது.
மேலும், போதை மருந்து தொடர்பாகவே, இந்த கொலை சம்பவமும் நடந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கைதான நபரை உளவியல் சோதனைக்கு உட்படுத்திய பின்னர், விசாரணைக்கு உட்படுத்த இருப்பதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த வழக்கின் உண்மையான பின்னணி இன்னும் முழுமையாக வெளிவரவிவில்லை என்பதுடன், குற்றவாளிக்கும் அவரால் பாதிக்கப்பட்டவருக்கும் இடையிலான உறவும் இன்னும் சரிபார்க்கப்படவில்லை எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 12 மணி நேரம் முன்

Vijay Television Awards: அதிக விருதுகளை தட்டிதூக்கிய சீரியல் எது தெரியமா.. வென்றவர்களின் லிஸ்ட் இதோ Cineulagam

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri
