அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு : அதிரடியாக கைதான 7 இந்தியர்கள்
அமெரிக்காவில் தகாத தொழிலில் ஈடுபட்டது தொடர்பாக நடந்தப்பட்ட விசேட விசாரணையில் 7 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் டென்டன் கவுண்டி பகுதியில் நடைபெற்ற விசேட சுற்றி வளைப்பிலே இவ்வாறு 7 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது நடவடிக்கை
டென்டன் கவுண்டி பொலிஸாரால் 2 நாட்கள் நடத்தப்பட்ட இந்த ,இரகசிய சோதனை நடவடிக்கைகளில் மொத்தம் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சமூகத்தில் பாலியல் சேவைகளை பெற முயற்சிக்கும் நபர்களை குறிவைத்து இந்த சோதனை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது கார்த்திக் ராயபதி, கல்லா மோனிஷ், அமித் குமார், ஜெய்கிரண் ரெட்டி மேகலா, நபின் ஷ்ரேஸ்தா, நிகில் கும்மாரி மற்றும் நிகில் பாண்டி என 7 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இவர்கள் மீது தகாத தொழிலில் ஈடுபட கோருதல், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிய முயலுதல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.