சூரியவெவ பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
சூரியவவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் காயமுற்ற ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொஸ்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்றின் சந்தேக நபரொருவரைக் கைது செய்ய விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட முயற்சியின் போது இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
சந்தேகநபர் மரணம்
இதன்போது குறித்த சந்தேக நபர் மற்றும் அவருடன் இருந்த இன்னுமொருவரும் இணைந்து விசேட அதிரடிப்படையினர் மீது துப்பபாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
அத்துடன் கைக்குண்டொன்றையும் எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதனையடுத்து விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட பதில் துப்பாக்கிச் சூட்டில் கொஸ்கொடதுப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.
மற்றைய நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.




