கட்டுநாயக்க விமான நிலையத்தில் நெரிசலை குறைக்க புதிய தீர்வு
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகள் நெரிசலை குறைப்பதற்கான ஒரு புதிய தீர்வாக, பயணிகளில் ஒரு பகுதியை வேறொரு இடத்தில் சரிபார்த்து check-in செய்யும் யோசனையை அரசாங்கம் முன்வைத்துள்ளது.
அதற்கமைய, கொழும்பு துறைமுக நகரில் தீர்வை வரியற்ற வணிக வளாகத்தில் check-in கவுண்டர்களை அமைக்க யோசைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகரத்தில் தீர்வை வரியற்ற வணிக வளாகத்திற்கு அருகில் புதிதாக நிறுவப்பட்ட கவுண்டர்கள் மூலம் பயணிகளின் கடவுச்சீட்டுகள் மற்றும் டிக்கெட்டுகளை சரிபார்க்க முடியும்.
check-in கவுண்டர்கள்
அவர்களின் பொதிகளை எடை சரிபார்க்கப்பட்டு ஏற்றுக்கொள்ளவும், அங்கிருந்து பயணிகள் மற்றும் பொதிகளை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்லவும் ஒரு அமைப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தற்போதுள்ள கவுண்டர்களில் கடும் நெரிசல் மற்றும் வரிசைகள் உள்ளன. ஆனால் புதிய கவுண்டர்களை அமைக்க இடமின்மை கடுமையான நெருக்கடியாக மாறியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.




