இலங்கையின் உண்மையான பணவீக்கத்தை சுட்டிக்காட்டும் ஸ்டீவ் ஹேன்க்கி
இலங்கை தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத்திணைக்களம் நாட்டின் பணவீக்கம் தொடர்பாக முன்வைத்துள்ள தரவுகள் முற்றிலும் புனையப்பட்டது என ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதார அறிவியல் பேராசிரியர் ஸ்டீவ் ஹேன்க்கி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பணவீக்கம் 66 வீதம் என தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் கூறினாலும் இலங்கையின் உண்மையான பணவீக்கம் 115 வீதம் என ஸ்டீவ் ஹேன்க்கி சுட்டிக்காட்டியுள்ளார்.
#SriLanka is in 5th place in this week's inflation roundup. On Nov 10, I measured LKA's #inflation at a stunning 115%/yr. In the meantime, the Sri Lankan Department of Census and Statistics reports official inflation in LKA at 66%/yr. The Department's number is complete fiction. pic.twitter.com/7zkVofSLRC
— Steve Hanke (@steve_hanke) November 16, 2022
உலகில் பணவீக்கம் அதிகம் கொண்ட நாடுகள் வரிசையில் இலங்கை 5வது இடத்தில் உள்ளது. சிம்பாப்வே முதலாவது இடத்திலும் கியூபா இரண்டாவது இடத்திலும் கானா மூன்றாவது இடத்திலும் வெனிசூலா நான்காவது இடத்திலும் உள்ளன.
இலங்கை அடுத்ததாக துருக்கி ஆறாவது இடத்தில் உள்ளது.