சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்
சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதற்கான புதிய முறைமையொன்று அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
சர்வதேச விமான சேவை நிறுவனங்களின் உள்நாட்டுப் பிரதிநிதிகளுடன் இன்றைய தினம் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
இந்த ஆண்டின் இறுதியில் குறிப்பிடத்தக்களவு சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு அழைத்து வரும் நோக்கில் விசேட சலுகைத் திட்டங்கள் அறிவிக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க விமான நிலையத்தில் பீ.சீ.ஆர் பரிசோதனை நடாத்தக்கூடிய ஆய்வு கூடமொன்று நிறுவப்பட உள்ளதாகவும் இதில் 3 மணித்தியாலங்களில் பரிசோதனை முடிவுகளை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.