நாடளாவிய ரீதியில் 23 பிரதேச அலுவலகங்கள் - இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் நடவடிக்கை
நாடளாவிய ரீதியில் புதிதாக 23 பிரதேச அலுவலகங்களை திறக்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் இலஞ்ச ஊழல் முறைப்பாடுகளை வழங்க கொழும்பு பிரதான அலுவலகத்திற்கு வருவதைத் தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சேவையில் 971 உத்தியோகத்தர்கள்
எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் இந்த அலுவலகங்கள் திறக்கப்படும் என ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பிரதேச மட்டத்திலேயே முறைப்பாடுகளைப் பொறுப்பேற்றல், விசாரணைகளை முன்னெடுத்தல் மற்றும் வழக்குத் தாக்கல் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் வகையில் அலுவலகங்களை தயார்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இந்த புதிய கிளைகளில் சட்ட அதிகாரிகள் உட்பட மொத்தம் 971 உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri