இலங்கை விமானப்படைக்கு சொந்தமான அனைத்து K-8 ஜெட் விமானங்களையும் ஆய்வு செய்ய நடவடிக்கை
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான அனைத்து K-8 ஜெட் விமானங்களிலும் நிலையான ஆய்வு நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாரியபொலவில் அண்மையில் K-8 ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சு இந்த ஆய்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டு ஆய்வுக் குழு
சீனாவில் தயாரிக்கப்பட்ட K-8 ரக ஜெட் விமானங்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
தேவை ஏற்பட்டால், வெளிநாட்டு ஆய்வுக் குழுக்களை வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விமான விபத்து குறித்து ஏழு பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 1 நாள் முன்

பிரெக்சிட்டால் பிரித்தானியாவுக்கு பெரும் இழப்பு: ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைய வற்புறுத்தல் News Lankasri
