அநுராதபுரம் போதனா வைத்தியசாலை விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
அநுராதபுரம் போதனா மருத்துவமனையின் பெண் மருத்துவர் மீது பாலியல் ரீதியாக அத்துமீறல் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 2025 மார்ச் 28 வரை மேலும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று (24) அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சந்தேக நபரின் அடையாள அணிவகுப்பு
இதற்கிடையில், சந்தேக நபரின் அடையாள அணிவகுப்பு இன்று மீண்டும் திட்டமிடப்பட்டிருந்தாலும், பாதிக்கப்பட்ட மருத்துவர் அடையாள அணிவகுப்பில் பங்கேற்காததால் குறித்த உத்தரவை நீதவான் பிறப்பித்துள்ளார்.
அடையாள அணிவகுப்பு ஆரம்பத்தில் மார்ச் 17 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அன்றைய தினம் மருத்துவர் நீதிமன்றத்திற்கு முன்னிலையாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
