நியூயோர்க்கின் ஐக்கிய நாடுகளின் நிரந்தர பிரதிநிதியாக முன்னாள் தலைமை நீதியரசர்
நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மற்றும் நிரந்தர பிரதிநிதி என இரண்டு பேரை நியமிப்பதற்கான பரிந்துரைகளை உயர்பதவிகளுக்கான குழு அங்கீகரித்துள்ளதாக நாடாளுமன்ற தகவல் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
அத்துடன், கியூபா குடியரசின் இலங்கையின் தூதராக நியமிக்கப்பட உள்ள ரத்நாயக்க முதியான்செலாகே மகிந்ததாச ரத்நாயக்க மற்றும் ஜப்பானுக்கான இலங்கையின் தூதராக நியமிக்கப்பட உள்ள பிவிதுரு ஜனக் குமாரசிங்க ஆகியோரின் பரிந்துரைகளை உயர் பதவிகளுக்கான குழு அங்கீகரித்துள்ளது.
உயர் பதவிகளுக்கான குழு
பெரிய பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்தின் இலங்கையின் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படவுள்ள சேனாதீர துமுன்னகே நிமல் உபாலி சேனாதீரவின் பரிந்துரையையும் உயர் பதவிகளுக்கான குழு அங்கீகரித்துள்ளது.
அதேவேளை, அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக நியமிக்க உள்ள முன்னாள் தலைமை நீதியரசர் ஜெயந்த சந்திரசிறி ஜெயசூர்யாவுக்கான பரிந்துரையையும் உயர் பதவிகளுக்கான குழு அங்கீகரித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 3 நாட்கள் முன்

திருப்பியடிக்கும் கனேடிய மக்கள்... ட்ரம்பால் 2 பில்லியன் டொலர் மற்றும் 14,000 வேலை வாய்ப்பு இழப்பு News Lankasri
