தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்ய நடவடிக்கை!
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை நாளைய தினம்(28.04.2026) காலை 08 மணிக்கு அளவீடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட செயலாளர் காணி உரிமையாளர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
தையிட்டி விகாரை அமைந்துள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
காணி அளவீட்டு செயன்முறை
இந்நிலையில் காணி உறுதி பத்திரங்களை வைத்துள்ள 17 காணி உரிமையாளர்களின் காணிகளை அளவீடு செய்து காணி வரைபடங்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் அதற்கான காணி அளவீடுகளை கடந்த 17ஆம் திகதி முன்னெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் நில அளவை திணைக்கள உத்தியோகஸ்தர்கள் , காணி உரிமையாளர்கள் தையிட்டி விகாரை பகுதியில் கூடிய வேளை , பிக்குவின் பொலிஸ் முறைப்பாடு காரணமாக அளவீட்டு பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில் மீண்டும் 28ஆம் திகதி காணி அளவீட்டு பணிகளை முன்னெடுக்க உள்ளதாகவும் , அன்றைய தினம் காணி உறுதி பத்திரங்களுடன் காணி அமைந்துள்ள பகுதிகளுக்கு காணி உரிமையாளர்கள் வருகைதந்து , தமது காணிகளை அடையாளம் காட்டுமாறு மாவட்ட செயலாளர் கடிதம் மூலம் உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளார்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 19 மணி நேரம் முன்
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அடுத்த டிராமாவை போட்ட குணசேகரன், ஈஸ்வரி கேட்ட கேள்வி, ஷாக்கில் குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri