தலவாக்கலை தொடருந்து நிலையத்தை நவீன வசதிகளுடன் புதுப்பிக்க நடவடிக்கை
தலவாக்கலை தொடருந்து நிலையத்தின் நடைமேடைகள் தரமுயர்த்தப்பட்டு, நவீன வசதிகளுடன் புனரமைப்புப் பணிகள் துரிதக் கதியில் தற்போது நடைபெற்று வருகின்றன.
கொழும்பிலிருந்து பதுளை வரையிலான தொடருந்து பாதையில் தொடருந்து இயக்கத்தை விரைவுபடுத்தும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
புதிய தொடருந்துக்கு இடமளிக்கும் வகையில் பல தொடருந்து நிலையங்களும் நடைமேடையும் புனரமைக்கப்படும் என்று தொடருந்து திணைக்களத்தின் நுவரெலியா மாவட்ட கண்காணிப்புப் பொறியாளர் தனுஷ்க திசநாயக்க தெரிவித்துள்ளார்.
புனரமைப்புப் பணிகள்
அண்மையில் ஏற்பட்ட இயற்கை சீற்றங்கள் மற்றும் நிலச்சரிவினால் தலவாக்கலை தொடருந்து நிலையம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

போக்குவரத்து அமைச்சு மற்றும் தொடருந்து திணைக்கள அதிகாரிகள் சமீபத்தில் தலவாக்கலை தொடருந்து நிலையத்திற்குச் சென்று புனரமைப்புப் பணிகளை ஆய்வு செய்தனர்.




பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்கிய ரம்யா கிருஷ்ணன் வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam