இலங்கையில் அதிகரிக்கும் குற்றச்செயல்கள் : பாதுகாப்பு அமைச்சர் முன்வைத்துள்ள யோசனை
இலங்கையில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை அடுத்து, நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் பொலிஸாரிடம் பதிவு செய்யவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
நாடாளுமன்ற அமர்வில் இன்று (11.12.2023) உரையாற்றும்போதே இதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
தமிழ் சமூகம் குறிப்பாக கொழும்பில் உள்ளவர்கள், பொலிஸாரால் பதிவு செய்யப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

எந்த இனத்தவர் என்பதை பொருட்படுத்தாமல் முழு மக்களையும் பதிவு செய்ய முடிவு செய்துள்ளதாக அமைச்சர் டிரான் அல்லாஸ் தெரிவித்தார்.
இதற்காக மூன்று மொழிகளிலும் அச்சிடப்பட்ட பதிவு படிவங்கள் விநியோகிக்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எவரையும் எந்த நேரத்திலும் அடையாளம் காணக்கூடிய வகையில் இலங்கை மக்கள்தொகையின் இணையத் தரவுத்தளம் உருவாக்கப்படும் என்றும் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri