அனலைதீவு கடற்றொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் : டக்ளஸ்
காலநிலை சீர்கேடு மற்றும் இயந்திரக் கோளாறு போன்றவை காரணமாக தமிழகத்தில் கரையொதுங்கிய அனலைதீவு கடற்றொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா(Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
அனலைதீவு கடற்பரப்பில் இருந்து கடந்த ஜூன் மாதம் 10 ஆம் திகதி மாலை 5.00 மணியளவில் கடற் கடற்றொழிலுக்கு சென்ற குறித்த இருவரும் கரை திரும்பாத காரணத்தினால் பதற்றம் ஏற்பட்டிருந்தது.
விடுத்துள்ள கோரிக்கை
இந்நிலையில் அனலைதீவு கடற்பரப்பெங்கும் கடற்படையினர் மற்றும் கடற்றொழிலாளர்களால் தீவிர தேடுதல் முன்னெடுக்கப்பட்டு வந்த போது, தேடப்பட்டுவந்த இருவரும் தமிழக கடற்பரப்பில் கரையொதுங்கிய தகவல் கிடைக்கப்பெற்றது.
இதனையடுத்து குறித்த இருவரது குடுப்பத்தினர் இன்று(13) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து இருவரையும் இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், கடற்றொழில் அமைச்சரினால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |






புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 21 மணி நேரம் முன்

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி... யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்தது? Manithan

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam
