மட்டக்களப்பில் 9 வயது சிறுமியை துன்புறுத்திய சித்தி - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
மட்டக்களப்பு பிரதேசம் ஒன்றில் 9 வயது சிறுமி ஒருவரை ஒரு வருடகாலமாக சித்திரவதை செய்த குற்றத்துக்காக சிறுமியின் சித்தியான 25 வயதுடைய அப்துல் மும்தாஜ் என்பவருக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 15 ஆயிரம் ரூபா அபராதமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 25 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று(29.10.2026) தீர்ப்பளித்துள்ளார்.
தண்டனை தீர்ப்பு அறிவிப்பு
குறித்த பிரதேசம் ஒன்றில் சிறுமியின் தாயார் இல்லாத நிலையில் அவரது தந்தையார் 2ஆவதாக 25 வயதுடைய அப்துல் மும்தாஜ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், கணவரின் முதல் மனைவியின் 9 வயது சிறுமியை கடந்த 2015 மார்ச் 10ஆம் திகதி தொடக்கம் 2016 மார்ச் 10ஆம் திகதியான ஒரு வருட காலத்தில் குறித்த சித்தி தொடர்ச்சியாக அடித்து துன்புறுத்தி சித்திரவதை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சிறுமியின் சித்தியை 2016இல் பொலிஸார் கைது செய்து அவருக்கு எதிராக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்று வந்த நிலையில் குறித்த வழக்கு 2022ஆம் ஆண்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்துள்ளது.
இந்த நிலையில் வழக்கு தொடுநர் சார்பில் அரச சட்டவாதிகளான எஸ். அனுஷாங்கன் மற்றும் ரி.தர்சிகா ஆகியோர் முன்னிலையாகி தொடர்ந்து வாதாடி வந்த நிலையில் குறித்த நபர் குற்றவாளியாக நீதிமன்றில் இந்த ஆண்டு ஒக்டோபர் 13ஆம் திகதி (13.10.2026) இனங்காணப்பட்டு தண்டனை தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த பெண்ணுக்கு முதலாவது குற்றத்திற்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 5 ஆயிரம் ரூபா அபராதமும் இரண்டாவது குற்றத்துக்கு தலா ஒரு குற்றத்திற்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 5 ஆயிரம் ரூபா அபராதமும் மூன்றாவது குற்றத்திற்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 5 ஆயிரம் அபராதமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 25 ஆயிரம் ரூபா நஷ்ட ஈடு வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்தோடு, குறித்த தண்டனையை சமகாலத்தில் செயல்படுத்துமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று தீர்ப்பளித்துள்ளார்.
10 ஆண்டுகளுக்கு முன் நீதிமன்றத்திலிருந்து நாமல் தப்பியது எப்படி..! விசாரணையில் அம்பலமான சட்ட நகர்வுகள்
வழி மாற்றிவிடப்பட்ட விமானம்., லண்டனில் சிக்கித் தவித்த இந்திய பெண் - ரூ.1.6 லட்சம் இழப்பீடு News Lankasri