இலங்கை வந்த ரஷ்ய தம்பதியினருக்கு ஏற்பட்ட நிலை! - பல லட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்கள் திருட்டு
களுத்துறை தெற்கில் ரஷ்ய தம்பதியரின் பெருந்தொகையான வெளிநாட்டு பணத்துடன், அவர்களின் பையை திருடிச் சென்ற ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைக்குட்டையால் பாதி இலக்கத் தகடு மூடப்பட்டு மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தேகநபர், கொள்ளைச் சம்பவத்திற்கு முன்னர் ரஷ்ய தம்பதியினரை பின்தொடர்ந்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் தம்பதியரின் கடவுச்சீட்டுகள் மற்றும் அமெரிக்க டொலர்கள் உட்பட பல வெளிநாட்டு நாணயங்கள் அடங்கிய பையை சந்தேகநபர் திருடியுள்ளார். ரஷ்ய தம்பதியினால் களுத்துறை தெற்கு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரால் பெறப்பட்ட சிசிடிவி காட்சிகளில், சந்தேகநபர் தம்பதியினரை சிறிது நேரம் பின்தொடர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும், கித்துலாவல பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் சந்தேகநபர் இருந்த போதே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு அவரை கைது செய்துள்ளனர்.
1335 யூரோக்கள், 1650 அமெரிக்க டொலர்கள் மற்றும் சந்தேகநபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளின் இருக்கைக்கு அடியில் தம்பதியினரின் பையில் இருந்த பல கடிதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளில் குறித்த நபர் போதைப்பொருளுக்கு அடிமையாகியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளதுடன், அவரிடம் போதைப்பொருள் சிலவற்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
