மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய இ.போ.ச ஊழியர்கள்
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான யாழ்ப்பாணம் - முல்லைத்தீவு போக்குவரத்து அரச பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் தாக்கியதில் இரு மாணவர்கள் பாதிப்படைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (26/10/2022) மாலை 6.00 மணியளவில் யாழ்ப்பாணம் பேருந்து நிலைய தரிப்பிடத்தில் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
மீசாலை புத்தூர்ச் சந்தியிலிருந்து யாழ்ப்பாணம் பாடசாலைக்கு சென்று வரும் மாணவ மாணவிகள் யாழ்ப்பாணம்-முல்லைத்தீவு சேவையில் ஈடுபடும் அரச பேருந்தில் ஏறச் சென்ற போது மாணவ மாணவிகளை ஏற வேண்டாம் என்று சாரதியும் நடத்துனரும் பேசியுள்ளனர்.
ஏன் ஏற வேண்டாம் என்று கேட்ட மாணவனை அறைந்த சாரதியும் நடத்துனரும் அம்மாணவனை தனியாக இழுத்து சென்று மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக யாழ். பேருந்து தரிப்பிட அலுவலகத்தில் முறையிட்ட போது எல்லோரும் சேர்ந்து மாணவர்களை மிரட்டியுள்ளனர்.
மாணவர்கள் மீது தாக்குதல்
இதனால் அச்சமடைந்த மாணவ மாணவிகள் கதிர்காமம் செல்லும் இ.போ.ச பேருந்தில் ஏறி கொடிகாமத்தில் இறங்கியுள்ளனர்.
இதன்போது யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் செல்லும் பேருந்துக்கு முன் பின்னாக துரத்தி வந்த முல்லைத்தீவு சேவையில் ஈடுபடும் சாரதியும் நடத்துனரும் கொடிகாமத்தில் இறங்கிய மாணவர்கள் இருவரை பிடித்து தமது பேருந்தின் உள்ளே இழுத்து தாக்க முற்பட்டுள்ளனர்.
இதனால் மற்றைய மாணவர் தனது சக மாணவர்களை கீழே இறக்கி விடுமாறு கேட்க அருகில் சென்ற போது அம் மாணவர்களை இறக்கி விட்டு பேருந்தை முன்னோக்கி நகர்த்தி பேருந்திற்கு அருகில் நின்ற மாணவனை இடித்து விழுத்திவிட்டு பேருந்தை எடுத்து சென்றுள்ளனர். அந்த மாணவன் பாதிப்படைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளோடு கொடிகாமம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இச் சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இ.போ.சபை ஏன் பாடசாலை மாணவர்களுக்கு பருவகாலச்சீட்டை வழங்குகிறது. வழங்கிய பின்னர் ஏன் ஏற்ற மறுக்கின்றனர். காட்டுமிராண்டித்தனமாக ஈடுபடும் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் மீது இலங்கை போக்குவரத்துச் சபையின் உயரதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என கேள்வி எழுப்பியுள்ளனர்.
பருவகாலச்சீட்டுப் பெற்ற மாணவர்கள் மூலம் வருமானம் கிடையாது என்றால் ஏன் பருவகாலச்சீட்டை இலங்கை போக்குவரத்துச் சபை வழங்குகிறது எனவும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.





ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri

13 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி செய்துள்ள மொத்த வசூல்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
