இலங்கையில் இன்றைய தினம் பதிவாகிய கோவிட் தொற்றாளர்களின் நிலவரம்
கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 957 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2386 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 133, 484ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை,இலங்கையில் நாளை முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை (13) முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்காக தேசிய அடையாள அட்டையின் இறுதி எண்ணின் அடிப்படையிலேயே வீட்டிலிருந்து வெளியே செல்ல முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri
கார்க் தீவுக்கு குறி! முக்கிய வான்வழி படைத் தளபதிகள் மத்திய கிழக்கிற்கு அனுப்பும் அமெரிக்கா News Lankasri