இலங்கையில் இன்று பதிவாகிய கோவிட் தொற்றாளர்களின் நிலவரம்
இலங்கைக்குள் இன்று வரையான காலப்பகுதியில் (ஜூன் 26) 2,50,000 பேர் கோவிட் தொற்றினால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இன்று மாத்திரம் 1801 பேர் கோவிட் தொற்றாளர்களாக கண்டறியப்பட்டனர். அனைத்து புதிய தொற்றுக்களும் 2021, தமிழ் சிங்கள புத்தாண்டு கோவிட் கொத்தணியுடன் தொடர்புடையவை.
இந்த நிலையில் ,இன்றுடன் இலங்கைக்குள் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 251,727 ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவத்துறை தகவல்களின் படி 31,310 வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் தற்போது முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில், கோவிட் வைரஸுக்காக மருத்துவ கவனிப்பில் இருந்த 2,172 நோயாளிகள் இன்று குணம் பெற்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இதனையடுத்து தொற்றுகளில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 216,840 ஆக உயர்ந்தது, COVID-19 இறப்பு எண்ணிக்கை இன்று வரையான காலப்பகுதியில் 2,905 ஆக உயர்ந்துள்ளது.





Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri

அமெரிக்காவில் 11 வருடங்கள்... இந்தியா திரும்பியவர் 3 ஆண்டுகளில் உருவாக்கிய ரூ 280 கோடி நிறுவனம் News Lankasri
