ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொருட்களுக்கு ஏற்பட்ட நிலை
ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கை உறவினர்களுக்கு அனுப்பிய உணவு பொருட்கள் உரியவர்களை சென்றடையவில்லை என தெரியவந்துள்ளது.
கொரோனா தொற்று காலப்பகுதியில் பல நெருக்கடிக்கு மத்தியில் தங்கள் உறவினர்களுக்காக அனுப்பப்பட்ட பொருட்கள் உரியவர்களை சென்றடையாமல் தேங்கிக் கிடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்று காலத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட சுமார் 130 கொள்கலன்கள் பால்சல்களுடன் திறக்கப்படாமல் உள்ளதென குறிப்பிடப்படுகின்றது.
குறித்த பார்சல்கள் சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், அதில் இருந்த உணவுப் பொருட்கள் உட்பட சில பொருட்கள் காலாவதியாகியுள்ளதாக அவற்றின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் நாட்டிற்கு அனுப்பப்பட்ட சுமார் 130 கொள்கலன் சரக்குகளை விடுவிக்க முடியாமல் போய்விட்டதாக குறிப்பிடப்படுகின்றது. இதனால் கடும் நெருக்கடிக்கு மத்தியில் ஐரோப்பா உட்பட வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொருட்கள் வீணாகி போயுள்ளமையை இலங்கை சுங்க பிரதிப் பணிப்பாளர் லால் அல்விஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
எப்படியிருப்பினும் இலங்கையில் பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் பின்னர் விடுமுறை நாட்களிலும் பொதிகள் அடங்கிய கொள்கலன்களில் உள்ள பொருட்கள் விடுக்கப்பட்டு வருகின்றதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது 75 வீதமான பொருட்கள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றினை உரியவர்களிடம் கொண்டு சேர்க்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
கப்பல் நிறுவனம் ஒன்றினால் இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களினால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும், அந்நிறுவனம் தொடர்ச்சியாக நாட்டிற்கு கொண்டு வரும் பொதிகளை குவித்து வருவதனால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்றிற்கு மத்தியில் உறவினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட உணவுப்பொருட்கள் உட்பட பல பொருட்கள் உறவினர்களிடம் சென்றடையாமை வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
