யாழில் சைவ ஆலயத்தின் சிலை உடைப்பு - சந்தேகநபரை கைது செய்த பொலிஸார்
யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சரவணை பகுதியில் அமைந்துள்ள சைவ ஆலயமொன்றில் உள்ள சிலை உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று (09.03.2026) இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
இதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை ஊர்காவற்துறை பொலிஸார் நேற்று(09) இரவு கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அவரை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.