மறைந்த அரசியல்வாதி விஜய குமாரதுங்கவின் சிலை சேதம்! பொலிஸார் விசாரணை
தெஹிவளை பொது சந்தைக்கு முன்பாக நிறுவப்பட்டுள்ள மறைந்த நடிகரும், அரசியல்வாதியுமான விஜய குமாரதுங்கவின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிலையின் முகத்தின் இடது பக்க பகுதி சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் வெளியிட்ட காரணம்
இந்த நிலையில் சிலை மீது கற்களை வீசிய அடையாளம்தெரியாத சிலர் தொடர்பில் தகவல் கிடைத்துள்ள போதிலும், இந்தச் சிலையை சேதப்படுத்தியதாகக் கூறப்படும் செயல் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
அத்துடன் சிலையின் ஒரு பகுதி இயற்கையாக இடிந்து விழுந்திருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த முறைப்பாடும் கிடைக்கப்பெறாதனால் பொலிஸார் இதுவரை சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |