24 மணிநேரத்தில் அதிக எரிபொருள் நிலையங்களில் கியூ.ஆர் அட்டை முறை! எரிசக்தி அமைச்சரின் தகவல்
நாட்டில் தேசிய எரிபொருள் கியூ.ஆர் குறியீட்டு முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனடிப்படையில் எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை பதிவாகியுள்ள தேசிய எரிபொருள் கியூ.ஆர் அட்டை முறைமை தொடர்பான புள்ளிவிபர பதிவுகளை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், 24 மணிநேரத்தில் கியூ.ஆர் குறியீட்டு முறைமையை பயன்படுத்தும் அதிகபட்ச எரிபொருள் நிலையங்களின் எண்ணிக்கை (1,004) நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் நீண்ட காலம் தரித்து நின்ற கப்பலுக்கு செலுத்தப்பட்ட பணம்! எரிசக்தி அமைச்சரின் புதிய அறிவிப்பு |
அத்துடன் இலங்கை முழுவதும் மொத்தம் 1235 எரிபொருள் நிலையங்கள் கியூ.ஆர் அட்டை முறைமையை ஏற்றுக்கொண்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலியான கியூ.ஆர் குறியீட்டு பயன்பாடு
இதேவேளை எரிபொருள் பெறுவதற்காக போலியான கியூ.ஆர் குறியீட்டைப் பயன்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
போலி கியூ.ஆர் குறியீடுகளைப் பயன்படுத்தி எரிபொருளைப் பெற சிலர் முயற்சித்தமை போன்ற பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்தகைய கியூ.ஆர் குறியீடுகளை அடையாளம் காண தகவல் தொழில்நுட்ப முகரவமைப்புடன் (ICTA) இணைந்து விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Stats Update - National Fuel Pass
— Kanchana Wijesekera (@kanchana_wij) August 4, 2022
6am on 3rd August to 6am on 4th August
• Highest Number of Fuel Stations (1,004) Using QR system in a 24 Hour period was recorded yesterday.
• Total of 1235 Fuel Stations Islandwide adopted to the QR system.
(CEYPETCO - 1,033, LIOC - 202) pic.twitter.com/bVdevOm75F