தொடருந்து நிலைய பொறுப்பதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை
துறைசார் அமைச்சரின் தலையீட்டின் கீழ் தொடருந்து நிலைய பொறுப்பதிகாரிகளின் பிரச்சினைகளுக்கு இன்று தீர்வு வழங்கப்படாவிட்டால் நாளை முதல் தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடருந்து நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரட்ன இதனை தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டாலும் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிகாரிகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் போராட்டம்
அதிகாரிகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேலைப்பளு மிக்க தருணத்திலும் தமது பிரச்சினைகளுக்கு அமைச்சர் தலையீடு செய்வது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காது கமிட்டிகளை அமைத்து பிரச்சினைகளை திசை திருப்பவதற்கு தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர் முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam