வெளிநாட்டு பணம் அனுப்பல் செப்டெம்பர் மாதத்தில் வீழ்ச்சி
ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது, செப்டெம்பர் மாதத்தில் வெளிநாட்டு பணியாளர்களால் அனுப்பப்பட்ட பணத்தொகை சற்று குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ஓகஸ்ட் மாதத்தில் பதிவாகிய 577 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், செப்டெம்பர் மாதத்தில் பெறப்பட்ட பணம் 556 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
இருப்பினும், செப்டம்பர் 2023 உடன் ஒப்பிடுகையில், 2024 செப்டம்பரில் வெளிநாட்டு பணியாளர்கள் பணம் அனுப்புவதில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளின் வருமானம்
இவ்வருடம் மார்ச் முதல் செப்டெம்பர் வரை தொடர்ச்சியாக வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பியுள்ள மாதாந்த தொகை 500 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, கடந்த மாதம் செப்டெம்பர் மாதத்தில் சுற்றுலா பயணிகளின் வருமானம் 181 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
இதன்படி, இவ்வருடம் ஜனவரி முதல் செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் சுற்றுலாத்துறை மூலம் கிடைத்த வருமானம் 2,348 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri
