விபத்தில் உயிரிழந்த சனத் நிசாந்த: கொள்கலன் சாரதியிடம் 5 மணிநேர வாக்குமூலம் பதிவு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தவின் சொகுசு கார் மோதியதாக கூறப்படும் கொள்கலன் வண்டியின் சாரதி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அவர் இன்று (12.02.2024) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதன்போது அவரிடம் சுமார் 5 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரணை ஆரம்பம்
விபத்து இடம்பெற்ற விதம் சந்தேகத்திற்குரியதாக உள்ளதால், இது குறித்து முறையான விசாரணை நடத்துமாறு சனத் நிசாந்தவின் மனைவி சட்டத்தரணி சாமரி பிரியங்கா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழின அழிப்பில் முன்னேறிச் செல்லும் பௌத்த சிங்கள அரசியல் 12 மணி நேரம் முன்
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam