பலரும் எதிர்பார்த்த ஈரானின் புதிய அதியுச்ச தலைவரின் முதல் அறிக்கை! வெளியான அதிரடி அறிவிப்புகள்
அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானியர்களின் இரத்தத்திற்குப் பழிவாங்க ஈரான் தயங்காது என்று ஈரானின் புதிய அதியுச்ச தலைவர் மொஜ்தபா கமேனி குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் அறிக்கை, அரசு கட்டுப்பாட்டில் உள்ள தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்டு வருகின்றது.
அதிரடி அறிவிப்பு
ஈரானின் அதியுச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தாக்குதலில் கொல்லப்பட்டதை தொடர்ந்து அவரது மகனான மொஜ்தபா கமேனி அதியுச்ச தலைவராக தெரிவுசெய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து அவர் பொதுவெளியில் தோன்றவில்லை. இந்தநிலையில் இன்றையதினம்(12) முதன்முறையாக உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த நாட்டு அரச தொலைக்காட்சியில் வௌியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பின் ஊடாக, அத்துடன், மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அமைந்துள்ள அனைத்து அமெரிக்க இராணுவத் தளங்களையும் உடனடியாக மூடிவிடுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானை கைப்பற்ற நினைத்தால்.. வளைகுடாவை படையெடுத்தவர்களின் இரத்தத்தால் ஓடச் செய்வோம்! விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
ஹோர்முஸ் நீரிணை
அவ்வாறு செய்யத் தவறினால், அந்தத் தளங்களைக் இலக்கு வைத்துத் தாக்குதல்களை நடத்த நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஈரான் அண்டை நாடுகளுடன் நட்புறவு மற்றும் ஒத்துழைப்பிற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும், தாக்குதல்கள் அமெரிக்க இராணுவத் தளங்களை மட்டுமே இலக்காகக் கொள்ளும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், ஈரானுக்கு எதிரான தரப்பினருக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில், ஹோர்முஸ் நீரிணையை தொடர்ந்து மூடிவைக்கப் போவதாகவும் புதிய அதி உயர் தலைவர் அந்த உரையில் தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணையை கடந்த இந்திய கப்பல்கள் - மறுப்பு தெரிவித்துள்ள ஈரான்! மும்பை வந்தடைந்துள்ள மற்றுமொரு கப்பல்
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் இயக்குநரின் அடுத்த புதிய சீரியல்.. தலைப்பு என்ன தெரியுமா? Cineulagam
சிறகடிக்க ஆசை சீரியல்: சிந்தாமணியின் மகளிடம் காதலை சொல்லப்போகும் சத்யா.. துணை நிற்கும் முத்து! Cineulagam
ரஷ்யாவை தாக்கிய பிரிட்டன் ஸ்டார்ம் ஷேடோ ஏவுகணை: பிரித்தானியா மீது ரஷ்யா நேரடி குற்றச்சாட்டு News Lankasri