கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தாக்குதல்: ஸ்ரீகாந்தா ஆதங்கம்

Kilinochchi Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Theepan Jun 26, 2022 07:47 AM GMT
Report

”கிளிநொச்சியில் சுகாதார பணியாளர்களுக்கான எரிபொருள் விநியோகத்தின் போது, மாவட்ட சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி சரவணபவன் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கின்றது”என தமிழ் தேசிய கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான ந.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், ‘’இன்றைய நெருக்கடியான சூழ்நிலையில் சுகாதார பணியாளர்கள் தமது கடமைக்கு ஒழுங்காகவும், உரிய நேரத்திலும் சமூகம் அளிப்பது மிகவும் அவசியமானது.

இந்த விடயம் சொல்லி தெரிந்துக்கொள்ள வேண்டிய ஒன்றல்ல. இருந்தும் இந்த உண்மையை உணர்ந்து கொள்ள மறுக்கும் நபர்கள் சிலர், அங்கும் இங்குமாக எரிபொருள் விநியோகம் தொடர்பில் எதிர்ப்பு தெரிவிப்பது முறையற்ற சமூக விரோத நடவடிக்கை என்பதை அழுத்தம் திருத்தமாக கூறியாக வேண்டும்.

கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தாக்குதல்: ஸ்ரீகாந்தா ஆதங்கம் | Statement For Attack On The Director

பாதிப்பு

ஒரு சிலரின் அடாவடித்தனமான செயற்பாடுகளால், வடக்கில் சுகாதார பணியாளர்கள் ஒரு சில மணித்தியாலயங்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கினால் சுகாதார சேவை செயல் இழக்குமானால், வைத்தியசாலைகளை நாடி நிற்கும் பல்லாயிரக்கணக்கான அப்பாவி நேயாளிகளின் கதி இன்றைய நெருக்கடி நிலையில் என்னவாகும்.

எனவே இந்த நிலைமையை அடாவடி செயல்களில் ஈடுபடும் நபர்கள் இனியாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.

கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தாக்குதல்: ஸ்ரீகாந்தா ஆதங்கம் | Statement For Attack On The Director

இப்போதெல்லாம் எரிபொருள் விநியோகத்தில் காணப்படும் ஒழுங்கீனங்களை தட்டி கேட்க சகலருக்கும் உரிமை உண்டு என்பதில் மாற்று கருத்தில்லை.

அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் முன்கூட்டியே பகிரங்கமாக அறிவிக்கப்பட்டு, எரிபொருள் விநியோக ஏற்பாடுகள் இடம்பெறுகின்றது. இதில் எவரும் தலையிட்டு அடாவடித்தனத்தில் ஈடுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

சமூகப் பொறுப்பு

கிளிநொச்சியில் அரங்கேறிய சம்பவம் போன்ற நிலைமைகள் எங்கே ஏற்பட்டாலும், அந்த இடங்களில் இருக்கக்கூடிய இளைஞர்கள் சமூக பொறுப்புடன் துணிந்து செயற்பட வேண்டும்.

கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தாக்குதல்: ஸ்ரீகாந்தா ஆதங்கம் | Statement For Attack On The Director

அடாவடித்தனத்தை முளையிலேயே கிள்ளி எறிய ஒருபோதும் இளைஞர்கள் தயங்க கூடாது. சட்டம் கூட அதனை அனுமதிக்கின்றது.

கிளிநொச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சுகாதார சேவை பணிப்பாளருக்கு எமது மனவருத்தத்தை நாம் பகிரங்கமாக தெரிவித்துகொள்கின்றோம்.

இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்ட நடவடிக்கைகளுக்கு எமது ஆதரவை வழங்க தீர்மானித்திருக்கின்றோம்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US