கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம்

Kilinochchi S. Sritharan Sri Lankan protests Angajan Ramanathan
By Jenitha Jun 25, 2022 07:55 PM GMT
Report

சிவஞானம் சிறீதரன் கடும் கண்டணம்

“எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ந.சரவணபவன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் வன்மையான கண்டனத்துக்குரியது”என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம் | Kilinochchi Director Health Services Attacked

சமூகப்பிறழ்வுச் செயல்

அத்தியாவசிய சேவைகளுள் முதன்மையானதாக உள்ள சுகாதாரத்துறையின் பதவிநிலை உத்தியோகத்தரும், வைத்தியருமான அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுமளவுக்கு காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்டுள்ளமை இந்த மாவட்டத்தின் மிகமோசமான சமூகப்பிறழ்வுச் செயலாகும்.

ஒட்டுமொத்த அரச சேவைத்துறையினரது பாதுகாப்பையும் கேள்விக்குட்படுத்தி, அவர்களிடையே அச்சநிலையைத் தோற்றுவித்த இச் சம்பவத்துக்கு எதிராக எனது கண்டனங்களைப் பதிவுசெய்வதோடு, இதுவிடயமாக உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறேன்.

முழு நாடும் எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடி நிலையில், மட்டுப்படுத்தப்பட்ட முறையில் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விநியோகம், ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் நீண்டதோர் வரிசை யுகத்தை தோற்றுவித்திருக்கிறது.

தொடரும் நெருக்கடி

கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம் | Kilinochchi Director Health Services Attacked

இரவு, பகல், மழை, வெயில் பாராது அன்றாடத் தேவைக்கான எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் நிற்கும் அரச உத்தியோகத்தர்கள் அதிலும் குறிப்பாக பெண் உத்தியோகத்தர்கள் மீது அவதூறான வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டு, அவர்கள் ஆகப்பெரும் மன அழுத்தங்களோடு எரிபொருளைப் பெறாமல் அழுதபடியே வீடு திரும்பிய பல சம்பவங்கள் கடந்த ஓரிரு நாட்களில் கிளிநொச்சியிலும் யாழ்ப்பாணத்திலும் நடைபெற்றுள்ளன.

எரிபொருள் என்பது அனைத்துத் துறைசார் தரப்பினருக்கும் அடிப்படைத் தேவையாக உள்ள இன்றைய காலச் சூழலில், தமது அன்றாடக் கடமைகளுக்கு அப்பால் நாளும், பொழுதுமாய் எரிபொருளுக்குக் காத்திருப்போர் கோபம், விரக்தி உள்ளிட்ட பல்வேறுவிதமான மனோநிலைகளோடு இருந்தாலும், அதே உணர்வுகளோடும், எதிர்பார்ப்போடும் காத்திருக்கும் சக மனிதர்களிடம், பொதுவெளியில் பிரயோகிக்கத்தகாத வார்த்தைகளாக அந்த மனோநிலையை வெளிப்படுத்துவது அவர்களை கடுமையாகப் பாதிக்கும் என்பதையும், அத்தகையை முரண் கருத்துக்கள் சமூக மற்றும் குழு வன்முறைகளுக்கு வழிகோலக்கூடும் என்பதையும் நாம் ஒவ்வொருவரும் உணரத்தலைப்பட வேண்டும்.

சமூகக் கடப்பாடு ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உண்டு

துறைசார் வேறுபாடுகளற்று எல்லோரும் எரிபொருளுக்காக காத்திருக்க வேண்டியுள்ள போதும், அவரவர் பணிகளின் அவசியம் கருதி சில விட்டுக்கொடுப்புக்களைச் செய்ய வேண்டிய சமூகக் கடப்பாடு ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உண்டு.

குறிப்பாக உயிர்காக்கும் சேவையாளர்களான மருத்துவர்களும், தாதியர்களும் கூட நீண்டிருக்கும் வரிசைகளில் நின்று எரிபொருளைப் பெறுவது இந்த நாட்டின் ஆகப்பெரும் அவல நிலையின் வெளிப்பாடே.

எரிபொருளுக்கான தேவைப்பாடுகள் எல்லோருக்கும் உள்ளது என்பதை உணர்ந்தவர்களாக, சமூகப் பொறுப்போடும், மனிதாபிமானத்தோடும், எமது பண்பாட்டையும் அதன்வழியான சமூகக் கடப்பாடுகளையும், வார்த்தை வரைமுறைகளையும் மீறாதவர்களாக, இந்த சமூகப் பேரிடரை எதிர்கொள்ளும் வல்லமையை எல்லோருமாக இணைந்து ஏற்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்”என்று தெரிவித்துள்ளார்.

அங்கஜன் இராமநாதன்

கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம் | Kilinochchi Director Health Services Attacked

கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து தாக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகத்தர்களுக்கான எரிபொருள் வழங்கும் செயற்பாட்டை கவனித்துக் கொண்டிருந்த கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ந.சரவணபவன் அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை ( 24 ) கிளிநொச்சியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.

நாம் கோவிட்டினால் கோரப் பிடியில் சிக்கித் தவித்ததனை எவரும் அவ்வளவு சுலபமாக மறந்துவிட முடியாது. கடந்த வருடம் எம் கண்களுக்கு தெய்வத்தை விட மேலாகத் தெரிந்த சுகாதாரப் பணியாளர்கள் இன்று தாக்கப்பட்டும் அவமானப்படுத்தப்பட்டும் வருகின்றனர். உயிர் காக்கும் உன்னத பணியில் ஈடுபடுபவர்கள் சுகாதாரப் பணியாளர்கள்.

வெறுமனே எரிபொருளுக்காக அவர்களை எதிர்ப்பது மனசாட்சிக்கு விரோதமான செயற்பாடு. கடந்த சில நாட்களாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இடம்பெறுகின்ற வன்முறைச் சம்பவங்களை ஊடகங்கள் வாயிலாக அறிந்திருந்தேன்.

உன்னத பணியில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் மனம் நோகும்படியான செயற்பாடுகள் பல இடம்பெறுகின்றன. பொலிஸ் பாதுகாப்புத் தரப்பினர் இவ்வாறான வன்முறைகளுக்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது. எரிபொருள் நிரப்பு நிலையம் உள்ளிட்ட இடங்களில் அடாவடியில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காலம் கோவிட் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் மூலமாக பல படிப்பினைகளை எமக்கு ஊட்டியுள்ளது. நெருக்கடி நிலைமையில் நாம் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்க வேண்டும். இனியும் இவ்வாறான வன்முறைகளில் ஈடுபடாமல் மனிதநேயப் பண்போடு வாழக் கற்றுக்கொள்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.   

கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம் | Kilinochchi Director Health Services Attacked           

செய்தி : கஜிந்திரன், யது           

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை வடக்கு, யாழ்ப்பாணம்

04 Sep, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US