செம்மணிப் புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் வழங்கியுள்ள உறுதி
செம்மணிப் புதைகுழி தொடர்பான விசாரணை நடவடிக்கை துரிதப்படுத்தப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதியளித்துள்ளார்.
விசேட கவனம்
இது தொடர்பில் நீதி அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,
செம்மணிப் புதைகுழி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ள விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும்.
இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், துரிதமாக விசாரணைகளும் இடம்பெறும்.

எதிர்வரும் நாட்களில் விளக்கம்
இதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டிய விடயத்தின் முக்கியத்துவத்தையும் உணர்கின்றேன்.
இதன்படி இது தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் விளக்கமளிப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மஹா சிவராத்திரி 2026 நேரலை
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan