கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடுமையாகும் கட்டுப்பாடுகள்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் முக அங்கீகார கமராக்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
தற்போது 08 கவுண்டர்களில் மட்டுமே பாதுகாப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாதுகாப்பு கமரா
இந்த திட்டத்தின் கீழ் 30 குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் பொலிஸ் பாதுகாப்பு கமராக்களை நிறுவ நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளுக்குச் செல்லும்போதும், வெளிநாட்டிலிருந்து வரும்போதும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள், பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் மற்றும் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை அடையாளம் காண முடியும் என அமைச்சர் கூறியுள்ளார்.
இதன் மூலம் குற்றப் புலனாய்வு பிரிவினால் அவர்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுவார்கள்.
குடிவரவு மற்றும் குடியகல்வு பிரிவு
முக அங்கீகார பாதுகாப்பு கமராக்கள் அனைத்து கவுண்டர்களிலும் பொருத்தப்படும் வரை, தற்போது அந்த கமராக்கள் பொருத்தப்பட்ட கவுண்டர்களை முடிந்தவரை பயன்படுத்த குடிவரவு மற்றும் குடியகல்வு பிரிவுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
குற்றவாளிகள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுக்க விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 23 மணி நேரம் முன்

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri

IQ Test: சிறையிலிருந்து தப்பித்தவர் யார்? 5 வினாடிகளில் புதிரைத் தீர்த்து மக்களை காப்பாத்துங்க Manithan
