ரஷ்யா பிராந்தியம் ஒன்றில் அறிவிக்கப்பட்ட அவசரகால நிலை
ரஷ்ய(Russia) பிராந்தியமான தைவாவில் காட்டுத்தீ காரணமாக அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தைவா பிராந்தியத்தில் காட்டுத்தீ பரவி வருவதனால் அங்கு அதிகாரிகள் பிராந்திய அவசரகால நிலையை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோசமடைந்துள்ள நிலைமை
இதுதொடர்பாக பிராந்திய ஆளுநர் விளாடிஸ்லாவ் கோவாலிக் (Vladislav Khovalyg) கூறுகையில், "நீடித்த வெப்பம் மற்றும் வறண்ட காலநிலையின் விளைவாக பைகெம்ஸ்கி (Piykhemsky), செடி-கோல்ஸ்கி (Chedi-Kholsky) மற்றும் டாண்டின்ஸ்கி (Tandinsky) மாவட்டங்களில் நிலைமை மோசமடைந்துள்ளது.
தீ சுமார் 7.7 சதுர மைல் பரப்பளவை சூழ்ந்துள்ளது" என தெரிவித்தார்.
மேலும் அவர், காட்டுத்தீயை எதிர்த்துப் போராடுவதற்கு அண்டை பிராந்தியங்களில் உதவி கோரியுள்ளார்.
ரஷ்யாவில் உள்ள சில பிராந்தியங்கள் காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்ட நிலையில், தைவாவும் அதில் ஒன்றாக இணைந்துள்ளதாக மத்திய வனப் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |