பங்களாதேஷில் கட்டுக்கடங்காத வன்முறை: கிரிக்கெட் வீரரின் வீட்டுக்கு தீ வைப்பு
பங்களாதேஷ் (Bangladesh) பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகிய நிலையில், இன்று (08) நாட்டை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்தும் அங்கு வன்முறை நீடிக்கிறது.
இதில் ஒரு கட்டமாக, பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஷ்ரப் பின் மோர்டாசாவின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததாக கூறப்படுகிறது.
மோர்டாசா, குல்னா பிரிவில் உள்ள நரைல் - 2 தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
பாரிய போராட்டம்
இந்த ஆண்டு தொடக்கத்தில் பங்களாதேஷில் நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது அவாமி லீக் வேட்பாளராக தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
பாரிய மாணவர் போராட்டங்களைத் தொடர்ந்து ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் மோர்டாசாவின் வீட்டை நாசம் செய்த வன்முறையாளர்கள், அதற்கு தீ வைத்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மொர்டாசா, தனது நீண்ட கிரிக்கெட் வாழ்க்கையில் 36 டெஸ்ட், 220 ஒருநாள் மற்றும் 54 டி20 போட்டிகளில் 390 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தி 2,955 ஓட்டங்களை எடுத்துள்ளார்.
விளையாட்டில் இருந்து விலகிய பிறகு, அவர் 2018இல் ஹசீனா தலைமையிலான அவாமி லீக்கில் சேர்ந்து அரசியலில் நுழைந்தார் மற்றும் நரைல் - 2 தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் இனமாகச் சிந்தித்தால் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரே ஒரே தெரிவு: ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |