எந்த நேரத்திலும் எந்த முடிவினையும் எடுப்பேன் – பிள்ளையான்

Pillayan Sri Lanka Politician Sri Lanka Sivanesathurai Santhirakanthan
By Kumar Mar 08, 2023 09:36 AM GMT
Report

அரசாங்கம் எனக்குத் தந்துள்ள பதவியையும் அதிகாரத்தையும் பயன்படுத்தாமல் செல்வேன் என நினைத்தீர்கள் என்றால் அது உங்களது பிழையான கணிப்பாகத்தான் இருக்கும் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

அறுவடையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் நெல்லை கொள்வனவு செய்து அதனை அப்பகுதியில் உள்ள பொருளாதார நெருக்கடியில் வறுமை நிலையில் உள்ள மக்களுக்குப் பகிர்ந்தளிக்கும் தேசிய திட்டத்தின் கீழான முதல் நிகழ்வு நேற்றைய தினம் (07.03.2023) மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சந்திரகாந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.  

எந்த நேரத்திலும் எந்த முடிவினையும் எடுப்பேன் – பிள்ளையான் | State Minister Sivanesathurai Santhirakanthan

வறிய குடும்பங்கள்

பொருளாதார நெருக்கடியில் வாழும் மக்களை நோக்காகக் கொண்டு ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ள திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 10151 குடும்பங்களுக்கான இரண்டு மாதங்களுக்குத் தேவையான 20 கிலோ அரிசிகள் இன்று வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தில் இது தொடர்பான நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய சிவநேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த தேசிய வேலைத்திட்டத்திற்கு 53 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன்,  இதன் மூலம் 01 இலட்சத்து 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வறிய குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி வீதம் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், கடந்த காலத்திலிருந்த மோசமான சூழ்நிலையிலிருந்து நாடு எழுந்துவருகின்றபோது, வறுமையில் வாழும் மக்கள் தங்களை தாங்களே கட்டியெழுப்பிச்செல்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தினை உருவாக்கவேண்டும் என்று அரசாங்கம் மிகக் கடுமையான உழைத்துக் கொண்டிருக்கும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் 53 கோடி ரூபா நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எந்த நேரத்திலும் எந்த முடிவினையும் எடுப்பேன் – பிள்ளையான் | State Minister Sivanesathurai Santhirakanthan

மக்கள் சோம்பேறிகளாக்கப்பட்டுள்ளார்கள்

இந்த மாதமும் அடுத்த மாத்திற்கும் நெல் கொள்வனவு செய்து அரசியினை வழங்குவதற்கு அரசாங்கம் பணிக்கும் கடமைகளைச் செய்து வழங்கும் என்பதை மாவட்ட அரசியல்வாதிகள், அதிகாரிகள் என்ற நிலையில் ஏற்றுக் கடமையாற்ற வேண்டும். அரசாங்கம் பாரிய செலவினை செய்துள்ளது இந்த அரசி வழங்கலுக்காக.

மக்கள் இதனை முதலீடாகக் கொண்டு வேறு தொழில்களை முன்னெடுக்க வேண்டும். எனக்கு தனிப்பட்ட ரீதியாக நிவாரணங்கள் வழங்குவதில் உடன்பாடு இல்லை. எனினும் ஏழ்மையான மக்களுக்கு நிவாரணமும் தேவை ஊக்குவிப்பும் தேவை, அதனைவிட அவர்களுக்கு ஊக்கம் தேவை. ஊக்கமானவர்கள் முயற்சிகளை மேற்கொண்டு உழைக்க வேண்டும். சில இடங்களில் அதிகமான நிவாரணங்கள் காரணமாகவும் மக்கள் சோம்பேறிகளாக்கப்பட்டுள்ளார்கள். நிவாரணம் மக்களை சோம்பேறியாக்கினால் இந்த மாவட்டத்தினை கட்டியெழுப்ப முடியாத நிலைக்குச் செல்லும்.

அரச அதிகாரிகள் மற்றவர்களை பதற்றப்படுத்தாமல் இங்கு வந்து மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும்.எனக்குத் தரப்பட்ட அதிகாரத்தில் யாரையும் விளையாட அனுமதிக்கமாட்டேன். மட்டக்களப்பு மாவட்டத்தில் அதி கூடிய வாக்கினால் மக்களால் தெரிவு செய்யப்பட்டவன் நான். அந்த ஆணையைக் கபளீகரம் செய்வதற்கு அனுமதிக்க மாட்டேன்.

எந்த நேரத்திலும் எந்த முடிவினையும் எடுப்பேன் – பிள்ளையான் | State Minister Sivanesathurai Santhirakanthan

எந்த முடிவினையும் எடுக்கக்கூடியவன்

வரலாற்றில் மிகவும் கஸ்டப்பட்டுவந்த மக்களைத் தூக்கி நிமிர்த்துதற்கு எந்த நேரத்திலும் எந்த முடிவினையும் எடுக்கக்கூடியவன் நான். அதனால்தான் இவ்வளவு பிரச்சினைக்கும் மத்தியிலும் அரசாங்கத்துடன் நிற்கின்றேன். வரலாற்றில் மிகவும் கஷ்டப்பட்டுவந்த மக்களைத் தூக்கி நிமிர்த்துதற்கு எந்த நேரத்திலும் எந்த முடிவினையும் எடுக்கக்கூடியவன் நான். அதனால்தான் இவ்வளவு பிரச்சினைக்கும் மத்தியிலும் அரசாங்கத்துடன் நிற்கின்றேன்.

அரசாங்கம் எனக்குத் தந்துள்ள பதவியையும் அதிகாரத்தையும் பயன்படுத்தாமல் செல்வேன் என நினைத்தீர்கள் என்றால் அது உங்களது பிழையான கணிப்பாகத்தான் இருக்கும். அதனை எனக்கு நீங்கள் சொல்லித்தரத் தேவையில்லை. சுற்று நிரூபங்களையும் தலைவரினால் பணிக்கப்பட்ட விடயங்களையும் செய்வதற்குப் பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.

பிள்ளையான் இருக்கும் காலத்தில் நீங்கள் வேலைசெய்யவேண்டும், இல்லையென்றால் இடமாற்றம் பெற்றுச்செல்லமுடியும். நான் மிகவும் கஷ்டப்பட்டுத் துன்பப்பட்டு இந்த இடத்திற்கு வந்துள்ளேன். எங்களது நல்லெண்ணத்தைப் பிழையாக கணிப்பிடவேண்டாம். கொரனாவும் அரசியல் ரீதியான முடிவுகளும் ஐரோப்பாவில் ஏற்பட்ட யுத்த நிலைமையும் மிகமோசமான நிலைமையினை காட்டிவிட்டுச்சென்றுள்ளது.

எந்த நேரத்திலும் எந்த முடிவினையும் எடுப்பேன் – பிள்ளையான் | State Minister Sivanesathurai Santhirakanthan

பெறுமதி இரட்டிப்பாகும்

இந்த சூழ்நிலையிலிருந்து மீள்வதற்கு நாடு படிப்படியாக முன்னேறிவருகின்றது. கிராமிய பொருளாதாரத்தினை நம்பியிருக்கின்ற மக்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தினை இந்த உலகம் உருவாக்கிக்கொடுத்துள்ளது.

உழைக்கும் மக்கள் தமது உற்பத்தியை அதிகரித்தால் அதற்கான கொள்வனவுத்திறன் உலகில் அதிகரித்துள்ளது. நீங்கள் உழைப்பினை அதிகரிக்கும்போது அதன் பெறுமதி இரட்டிப்பாகும் வாய்ப்புகள் உள்ளது.

இன்றுள்ள நிலைமையினை சிந்திக்காமல் எதிர்கால சமூகம் தொடர்பில் சிந்தித்து மாவட்டத்தினை முன்னேற்றக்கூடிய வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.  அரசியலுக்கு அப்பால் கிழக்கு மாகாணத்தின் பொருளாதார இருப்புக்காகச் செயலாற்ற முன்வாருங்கள் என்ற அழைப்பினை விடுக்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார். 

இந்த நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் சுதாகர், உதவி பிரதேச செயலாளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் உட்படப் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US