கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் இராஜாங்க அமைச்சர் உட்பட இருவர் பலி
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.
கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், இராஜாங்க அமைச்சரும் இன்னும் நால்வரும் பயணித்த வாகனம் கொள்கலன் ஊர்தியொன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த வாகனம் கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான நிலையில் அமைச்சர் உட்பட மூவர் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் விபத்தில் படுகாயமடைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தரும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்தானது இன்று அதிகாலை 2 மணியளவில் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் R 11.1 கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
மேலும், விபத்தில் ஜெயக்கொடி என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri