ஆளும் கட்சியின் முக்கிய இராஜாங்க அமைச்சர் இராஜினாமா! ஜனாதிபதிக்கு சென்ற 7 பக்க கடிதம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சருமான ரொஷான் ரணசிங்க தனது இராஜாங்க அமைச்சர் மற்றும் மாவட்ட அமைப்பாளர் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளார் என தெரியவருகிறது.
இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அவர் எழுதியுள்ளார்.
அதில் இயற்கை உரங்களை பயன்படுத்தியமையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
7 பக்கங்கள் கொண்ட நீண்ட கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், தமது பிரச்சினைகளை நேரடியாக ஜனாதிபதியிடம் முன்வைக்க கூட சந்தர்ப்பம் வழங்காமை குறித்து மிகுந்த வருத்தமடைவதாகவும் அவர் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை கடந்த மாதம் 22ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
நாட்டு மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இந்த தருணத்தில், வெறுமனே என்னால் வேடிக்கை பார்க்க முடியாது என நிமல் லான்சா தெரிவித்திருந்ததுடன், சிறப்புரிமை மற்றும் அதிகாரம் ஆகியவற்றை கடந்து தான் எப்போதும் மனசாட்சிக்கு கட்டுப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
தொடர்புடைய செய்தி...





அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
