பாதை அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்ற இராஜாங்க அமைச்சருக்கு எதிர்ப்பு
இலங்கையில் பாதையொன்று திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்ற இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் சமரவிக்ரம ஆகியோருக்கு பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
மதிரிகிரிய பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த பாதை ஒன்றை அங்குரார்ப்பணம் செய்து வைப்பதற்காக இருவரும் குறித்த இடத்திற்கு சென்றிருந்தனர்.
நீண்ட காலமாக சேதமடைந்த நிலையில் இருந்த பாதை ஒன்று தொடர்பிலேயே பொதுமக்கள் தங்களுடைய எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
கைவிடப்பட்ட நிகழ்வு
இதனால் பொதுமக்களுக்கும், இராஜாங்க அமைச்சருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
மக்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக பாதை திறந்து வைக்கும் நிகழ்வு இடைநடுவில் கைவிடப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் மதிரிகிரிய பிரதேச சபையின் தலைவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரியவருகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



