இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் முல்லைத்தீவுக்கு விஜயம்
இரட்டைவாய்க்கால் முதல் மாத்தளன் வரையான வீதியை புனரமைத்து தருவதாக கிராமிய
வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்
முல்லைத்தீவு மக்களுக்கு வாக்குறுதி வழங்கியுள்ளார்.
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்றைய தினம் (28.03.2024) முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
கள விஜயம்
இதன்போது அம்பலவன் பொக்கனைக்கு விஜயம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சரை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் வரவேற்றுள்ளார்.
இரட்டைவாய்க்கால் - மாத்தளன் சாலை வீதி புனரமைப்பு தொடர்பில் அமைச்சர் நேரடியாக பார்வையிட்டதுடன் கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
இந்த கள விஜயத்தின் போது கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ம.உமாமகள், கிராம அலுவலகர்கள், பொதுமக்கள், எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
செய்தி - சண்முகம் தவசீலன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |