எலான் மஸ்கின் ஸ்டார்லிங் திட்டம் இடைநிறுத்தப்படவில்லை- அறிவித்த அரசாங்கம்
ஸ்டார்லிங்கின் செயற்கைக்கோள் இணைய சேவை திட்டம், இலங்கையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறும் செய்திகளை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகம் மறுத்துள்ளது.
இந்த சேவை, எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் செயல்பாடுகளைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சவேந்திர சில்வா உட்பட நால்வருக்கு பிரித்தானியாவால் விதிக்கப்பட்டுள்ள அதிரடி தடை! வரவேற்கும் சிறீதரன்
திட்டத்தில் தாமதம்
இந்த நிலையில், டேஷ்போர்ட் எனப்படும் ஒழுங்குமுறை கண்காணிப்பு அமைப்பை செயல்படுத்துவதால், இந்த திட்டத்தில் தாமதம் ஏற்பட்டதாக, ஆணையகத்தின் இயக்குநர் பந்துல ஹேரத் கூறியுள்ளார்.
இதேவேளை, பயனர்களுக்கு வழங்கப்படும் சேவையின் தரத்தை கண்காணிக்கவும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்யவும் டேஷ்போர்ட் அமைப்பின் தேவை காரணமாக மட்டுமே இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது என்று அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
தேவையான அமைப்புகள் அமைக்கப்பட்டவுடன் ஸ்டார்லிங்கின் செயல்பாடுகள் தொடரும் என்று ஹேரத் கூறியுள்ளார் .
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 2 நாட்கள் முன்

Numerology: இந்த எண்ணில் பிறந்தவங்களுக்கு நிதி சிக்கல் வருமாம்.. மார்ச் 26 எப்படி இருக்கும்? Manithan

லாபத்தில் வந்த பணம்.., ஊழியர்களுக்கு பைக்குகள், தங்க நாணயங்கள் கொடுத்து அசத்திய டிராவல்ஸ் உரிமையாளர் News Lankasri
