தமிழக முதல்வராக பதவியேற்றார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்
தமிழகத்தின் புதிய முதல்வராக திமுக தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இன்று ஆளுநர் மாளிகையில் வைத்து பதவியேற்றுள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு முதல்வராக பதவிபிரமாணம் செய்து வைத்துள்ளார்.
ஸ்டாலினை தொடர்ந்து திமுக சார்பாக 33 அமைச்சர்கள் வரிசையாக பதவி ஏற்றுக்கொண்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழகம், கேரளா, புதுவை ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் திகதி சட்டசபை தேர்தல் நடைபெற்றிருந்தது.
அசாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக எட்டு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற்றது.
இந்த நிலையில் தமிழ்நாடு உட்பட ஐந்து மாநிலச் சட்டசபை தேர்தல் முடிவுகள் அண்மையில் வெளியாகியிருந்தன.
இதன் அடிப்படையில் தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளதுடன், தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின் திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




எங்கள் நாட்டில் உன்னை பணக்காரர் ஆக விடமாட்டேன்: புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஜேர்மனியில் சந்தித்த அதிர்ச்சி News Lankasri

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
