கோட்டபாய அரசுக்கு சவாலாகும் முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை
கச்சத்தீவு மீட்பு விவகாரம் என்பது மிகவும் சிக்கலுக்குரிய பிரச்சினை. இலங்கையை தங்களது செல்வாக்கு மண்டலத்திற்குள் வைத்துக்கொள்ள விட்டுக்கொடுக்கப்பட்டதே கச்சத்தீவு என பிரித்தானியாவில் இருக்கக்கூடிய அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு அரசியல் நிகழ்ச்சிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
கச்சத்தீவு மீட்பு விவகாரம் என்பது மிகவும் சிக்கலுக்குரிய பிரச்சினை.இதனை கையிலெடுத்துள்ளமை ஏதோவொன்றை மனதில் வைத்துக்கொண்டு எடுக்கப்பட்ட முடிவாகவே கருதப்படுகின்றது.
1974 ஆம் ஆண்டு வரைக்கும் வரலாற்று ரீதியாக மன்னர்களின் ஆளுகையின் கீழ் காணப்பட்ட கச்சத்தீவு இலங்கையை தங்களது செல்வாக்கு மண்டலத்திற்குள் வைத்துக்கொள்வதற்காக பரிசாக வழங்கப்பட்டதே ஆகும்.
இலங்கை பிரித்தானியா,அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் சார்ந்து காணப்பட்டமையினால் இலங்கையை தங்களது செல்வாக்கு மண்டலத்திற்குள் வைத்துக்கொள்ளவே இலங்கைக்கு பல கையூட்டல்களை தமிழக அரசு வழங்கி வந்தது.
இந்நிலையில்,30 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் இலங்கையை தங்களது செல்வாக்கு மண்டலத்திற்குள் வைத்துக்கொள்ள வேண்டிய நிலை தற்போது இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது கால் பதித்துள்ள சீனாவின் ஆதிக்கம் கச்சத்தீவு பகுதிக்குள் வரும் அவ்வாறு வந்தால் அவை இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்ற காரணத்திற்காக மீண்டும் கச்சதீவினை பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.
இருப்பினும்,கச்சத்தீவினை மீள பெறுவதென்பது இலகுவான காரணமல்ல.அவ்வாறு அது நடைபெறுமாயின் அது ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கான நிரந்தர தீர்விற்கு கொண்டு செல்லும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழர்களின் விடுதலைக்கான திறவுக்கோள் தமிழகத்திலேயே உள்ளது.அதற்கான திறவுக்கோள் தற்போது ஸ்டாலின் கைகளிலேயே உள்ளது.எனவே தமிழ் தலைவர்கள் ஈழத்தமிழர்களின் பிரச்சினையை உறக்க சொல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
டபுள் எலிமினேஷன்.. பிக் பாஸ் 9ல் இருந்து சற்றுமுன் எலிமினேட் செய்யப்பட்ட இரண்டு போட்டியாளர்கள் Cineulagam
கில்லியை ஓரங்கட்டி முதல் நாள் ரீ-ரிலீஸ் வசூலில் மாஸ் காட்டிய ரஜினியின் படையப்பா... தெறிக்கும் வசூல் Cineulagam