இதயத்தை நொறுக்கும் சம்பவம்: ஜெய்சங்கரிடம் முறையிட்ட ஸ்டாலின்
இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப்படகு மோதியதில் உயிரிழந்த கடற்றொழிலாளரின் உடலை உடனடியாக தாயகம் கொண்டு வரவும், காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி, அவர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வர உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தி மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு கடற்றொழிலாளர்கள், இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் சென்று நெடுந்தீவு அருகே கடற்றொழிலில் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப்படகு மோதியதில், கடற்றொழிலில் விசைப்படகு சேதமடைந்து நீரில் மூழ்கியது.
உயிரிழந்த கடற்றொழிலாளர்
இதன்போது, 59வயதுடைய மலைச்சாமி என்பவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவரை காணவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக அதிர்ச்சியையும் ஆழ்ந்த இரங்கலையும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அத்துடன், உயிரிழந்த மலைச்சாமியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இந்தநிலையில், இதுபோன்ற நிகழ்வுகளில் இந்திய கடற்றொழிலாளர்கள் உயிரிழப்பது இதயத்தை நொறுக்குவதாகவும், ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருக்கிறது என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த சம்பவம் கடற்றொழிலாளர் சமூகத்தினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளதுடன் இந்த விவகாரத்தை இலங்கை அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்லுமாறு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரை, ஸ்டாலின் கேட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |