லாஸ் ஏஞ்சல்ஸில் வைத்தியசாலைக்குள் கத்திக்குத்து - ஆபத்தான நிலையில் பலர்
அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வைத்தியசாலை ஒன்றுக்குள் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்சினோ வைத்தியசாலை மையத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் குறைந்தது மூன்று பேர் கத்தியால் குத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வைத்தியர் ஒருவர் இரண்டு செவிலியர்கள் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். எனினும், பாதிக்கப்பட்டவர்களின் உறுதியான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.
Ventura Boulevard 16200 பிளாக்கில் உள்ள வைத்தியசாலைக்கு பிற்பகல் 3:50 மணிக்கு அதிகாரிகள் அழைக்கப்பட்டதாக லாஸ் ஏஞ்சல்ஸ் காவல் துறை செய்தித் தொடர்பாளர் டிரேக் மேடிசன் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மூவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் நிக்கோலஸ் பிராங்கே உறுதிப்படுத்தியுள்ளார்.
சந்தேக நபர், கத்தியுடன் வைத்தியசாலையில் உள்ள ஒரு அறையில் அடைக்கப்பட்டதுடன், வைத்தியசாலை கட்டிடத்தின் சில பகுதிகளில் இருந்து மக்களை அதிகாரிகள் வெளியேற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அண்மைய நாட்களாக அமெரிக்காவின் பல பகுதிகளிலும் இவ்வான குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக பதிவாகின்றன. கடந்த நாட்களாகவே அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு, கத்திக்குத்து தாக்குதல்கள என பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அதில் அப்பாவி பொது மக்கள் பலரும் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக அண்மையில் டெக்ஸாஸ் தொடக்க பாடசாலை ஒன்றில் இளைஞர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 19 குழந்தைகள் உள்ளிட்ட 21 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.