ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் இடம்பெற்ற புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய திருவிழா
புல்லாவெளி புனித செபஸ்தியார் திருத்தலத்தின் குருநகர் பங்கு மக்களால் சிறப்பிக்கப்படும் ஆடிமாத திருவிழா இன்று (6) ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பங்கின் வரலாற்று சிறப்புமிக்க புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய திருவிழா இன்று காலை 6 மணியளவில் திருச்செபமாலையுடன் 7 மணியளவில் திருவிழா திருப்பலி ஆரம்பமானது.
திருவிழா திருப்பலி
இத்திருவிழா திருப்பலியானது கட்டைக்காட்டு பங்கு தந்தை வன பிதா அமல்ராஜ் தலைமையில் ஆரம்பமாகி அருட்தந்தை ஜெபரன்சன் மற்றும் அருட்தந்தை யாவிஸ் மற்றும் அருட்தந்தை அலவன்ராஜ சிங்கன் அமலமரித்தியாகிகள் மற்றும் father றொகானால் கூட்டுத் திருப்பலியாக திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டடது.
திருவிழா திருப்பலியை தொடர்ந்து புனித செபஸ்தியாரின் திருச்சொரூப பவனி இடம்பெற்றதுடன் அதனை தொடர்ந்து செபஸ்தியாரின் ஆசீர்வாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
திருவிழா திருப்பலியில் அருட் தந்தையர்கள், அருட் சகோதரர்கள், அருட்சகோதரிகள் மற்றும் இலங்கை முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 5 மணி நேரம் முன்

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
