சிறப்பாக நடந்து முடிந்த அளம்பில் புனித அந்தோனியார் ஆலய திருவிழா
முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட அளம்பில் புனித அந்தோனியார் ஆலய திருவிழா சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
நேற்றைய தினம்(13.06.2026) இடம்பெற்ற இந்த திருவிழாவில் திரளான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அளம்பில் அந்தோனியார் ஆலய திருவிழாவின் வேஸ்பர் திருப்பலி நேற்றுமுன்தினம்(12.06.2024) அன்று மாலை நடைபெற்றது.
திருவிழா திருப்பலி
இதனைத் தொடர்ந்து திருவிழா திருப்பலியானது நேற்று(13)காலை யாழ் மறைமாவட்ட மறைக்கல்வி நடுநிலைய இயக்குனர் அருட்பணி லியோ வின்சன் தலைமையில் நடைபெற்று திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.

திருவிழாவில் மறைக்கோட்ட குருக்கள், அருட்தந்தையர்கள் பங்குத்தந்தையர்கள், அருட்சககோதரிகள் உள்ளிட்டவர்களின் பங்கு பற்றலுடன் சிறப்பாக நடைபெற்றுள்ளதுடன், அரச திணைக்கள அதிகாரிகளும் திருவிழாவில் பங்கெடுத்துள்ளார்கள் திருவிழா திருப்பலி நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.





